திருகோணமலை கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, October 19, 2020

திருகோணமலை கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு

திருகோணமலை, அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் இன்று ( 19) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் தனிமையாக வாழ்ந்து வந்த திருமணமாகாத, 46 வயதுடைய நபர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் தற்போது அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள கடற்கரையோரத்திலிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad