பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் தேசிய பாடசாலையான இப்பாடசாலையின் சுற்றுமதிலில் ஒரு மாதத்திற்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டு, உடைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறு வெடிப்படைந்து விழும் நிலையிலுள்ள மதிலைத் தாங்கி ஒரு மரத்திலான பலகை பொருத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
குறித்த பாடசாலை வீதியைப் பயன்படுத்தும் பாதசாரிகள் முதல் பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, இப்பாடசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், பழைய மாணவர்கள் இவ்விடயத்தில் கவனமெடுத்து செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment