தீப்பெட்டிக்குள் ஹெரோயின் கடத்திய இளைஞன் கைது - வீட்டிலிருந்து மாவா போதைப் பொருளும் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

தீப்பெட்டிக்குள் ஹெரோயின் கடத்திய இளைஞன் கைது - வீட்டிலிருந்து மாவா போதைப் பொருளும் கைப்பற்றல்

பாறுக் ஷிஹான்

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 29 வயதுடைய இளைஞனை சனிக்கிழமை (3) இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த இளைஞன் வருகை தந்த மோட்டார் சைக்கிளின் ஆசனத்தின் கீழ் தீப்பெட்டியொன்றில் மறைத்து சிறு பொதி செய்யப்பட்ட ஹெரோயின் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன், விசாரணையை முன்னெடுத்த பின்னர் குறித்த இளைஞனின் வீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட மாவா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.

கல்முனை-2, கடற்கரைப் பள்ளி வீதியைச் சேரந்த 29 வயதுடைய குறித்த இளைஞனிடமிருந்து 10 மில்லி கிராம் மற்றும் மாவா தூள் 30 கிராம் என்பன கைப்பற்றப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment