நாட்டுத் தலைவரின் பெயரை விடவும் ரிஷாத் பதியுதீனின் பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது - முஷாரப் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

நாட்டுத் தலைவரின் பெயரை விடவும் ரிஷாத் பதியுதீனின் பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது - முஷாரப் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

பி.சி.ஆர்.பரிசோதனையை காரணம் காட்டி ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்தது போல் சித்திரிக்கின்றனர். ரிஷாத் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் உள்ளது. 

பாராளுமன்றமும் அரசும் ரிஷாத் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத் தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதனை விடவும் ரிஷாத் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. 

ரிஷாத் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் கைதானாலும் பாராளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். 

அதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கியபோதும் றிஷாத்துக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி பாராளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment