பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நிறைவு - விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நிறைவு - விசேட வைத்தியர் சுதத் சமரவீர

மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றுக்குள்ளாநோரின் எண்ணிக்கை 1034 ஆகும் என்றும் அவர் கூறினார். 

இன்று (08) காலை சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் மூலமான பெறுபேறுகள் தற்பொழுது கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த தகவல்களை உறுதிசெய்த பின்னர் நோயாளர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க முடியும். 

காசல் மகளிர் வைத்தியசாலையில் கற்பிணிப் பெண்ணிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ஆடைத் தொழிச்சாலைக்கு சேவைகளை வழங்கும் மற்றுமொரு நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்றும் இவர் பிரன்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புபட்ட கொவிட்-19 கொத்தணி நோயாளர் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதுவரையில் சம்பந்தப்ட்ட பெண் பணியாற்றிய நிறுவனத்தில் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்படுகின்றனர். அடையாளம் காணப்பட்ட பல நோயாளர்கள் தற்பொழுது வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அங்கொடை தொற்றுநோய் தேசிய மத்திய நிலையம், வெலிகந்த வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, காத்தாங்குடி தெல்தெணிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, முல்லேரியா, அம்பாந்தோட்டை, ரம்புக்கன மற்றும் கம்புறுகம ஆகிய வைத்தியசாலைகளிலேயே அனுதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment