தற்போது நிலவும் கொவிட்-19 நிலைமையின் காரணமாக ஓய்வூதிய திணைக்களத்தை சார்ந்திருப்போரின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஓய்வூதிய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 அவசர நிலைமையின் காரணமாக ஓய்வூதிய செயலூக்க நேர்முகப் பரீட்சைக்காக ஓய்வூதியம் பெறுவோரை அழைப்பது மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்திற்கு வரும் அனைத்து ஓய்வூதியகாரர்களின் வருகை அக்டோபர் மாதம் 08 ஆம், 09 ஆம் மற்றும் 10 ஆம் ஆகிய திகதிகளில் இடைநிறுத்துவதற்கு ஓய்வூதிய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக அக்டோபர் மாதம் 08ஆம், 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஓய்வூதியம் பெறும் எவரும் ஓய்வூதிய திணைக்கள வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment