சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்! - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஐ.எல்.எம் நாஸிம் 

சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவுசெய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஒன்று இன்று (26) முதல் இடம்பெறுகின்றது.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கொவிட்-19 வைரஸின் பரவலை சம்மாந்துறையில் தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச எல்லையில் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிகளை இடைநிறுத்தி வியாபாரிகளையும், அவர்களது வாகனங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று நீக்கி கிருமி நாசினியும் தெளித்து, உடல் வெப்ப நிலையினையும் பரிசோதனை செய்து சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமையினை உறுதிப்படுத்தி திகதியிட்ட வியாபார அனுமதி அட்டை ஒன்றினையும் வழங்கும் நடவடிக்கை சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக சம்மாந்துறை கொரோனா வைரஸ் தடுப்பு வழிநடாத்தல் குழுக் கூட்ட தீர்மானத்திற்கமைவாகவே சம்மாந்துறை பிரதேசத்தின் நுழைவாயில்களான நெல்லுப்பிடிச் சந்தி, வங்களாவடி, வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் சோதனை சாவடிகளை மு.ப. 6.00 தொடக்கம் மு.ப. 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment