கொழும்பில் கொரோனா பரவலை தடுக்க ஆறு குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் - டொக்டர் ருவன் விஜேமுனி - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

கொழும்பில் கொரோனா பரவலை தடுக்க ஆறு குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் - டொக்டர் ருவன் விஜேமுனி

கொழும்பில் கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க 6 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,6 சுகாதார அதிகாரிகளின் கீழ் 49 பொது சுகாதார சேவை பணியாளர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து தொற்று மேலும் பரவாமல் தடுப்பது, கொழும்பு மற்றும் கொழும்பு நகருக்கு வெளியே தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதை தடுப்பது போன்ற முக்கிய விடயங்கள் குறித்து இந்த குழுக்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

இந்த சுகாதார அதிகாரிகளின் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களின் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டுபிடித்து மேலும் பரவாமல் தடுப்பது, கொழும்பு நகருக்குள் அதை நிறுத்தி வைத்தல் மற்றும் கொழும்பு நகருக்கு வெளியே செல்ல விடாமல் நிறுத்தி வைத்தல், அதிக ஆபத்து மிக்கவர்களை தெரிவு செய்து அவர்கள் தொடர்பான பி.சி.ஆர். பரிசோதனைகளை முதலில் நடத்தல் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதல் கொழும்பில் மட்டும் 8 ஆயிரத்து 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

´ஒக்டாபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை 2884 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களில் 11 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இது சதவீதமாக 0.35 ஆகும். மிகவும் ஆபத்தில் உள்ளவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்´

No comments:

Post a Comment

Post Bottom Ad