ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் எந்த வாகனத்தையும் நிறுத்த முடியாது - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் எந்த வாகனத்தையும் நிறுத்த முடியாது - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திற்குள் இன்றிரவு 10 மணிக்குப் பிறகு எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஊரடங்கினால் மகப்பேறு பெண்கள் மற்றும் உயர்தர் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம் உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகளை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஏனைய அரச ஊழியர்கள் தங்களது கடமை கடிதத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்த முடியும். ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் இன்றிரவு கடமைகளை நிறைவு செய்யும் தொழிலாளர்கள் அவர்களது குடியிருப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு உத்தரவு மாவட்டத்திற்குள் நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, விமான நிலைய சேவைகள் மற்றும் ஊடகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியை பாதிக்காது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் ஆடை தொழிற்சாலைகள் செயல்படக் கூடும் என்றும் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை குறித்த தொழிற்சாலைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குளியாபிட்டியில் உள்ள ஐந்து பொலிஸ் பிரிவுகளுக்கும் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment