சாரதிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் இரு வாகனங்களுடன் மோதி பாலத்துடன் மோதிய பஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

சாரதிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் இரு வாகனங்களுடன் மோதி பாலத்துடன் மோதிய பஸ்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ் மாங்குளத்தில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியை விட்டு விலகிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய வகை கார் ஒன்றுடன் மோதி, அருகில் இருந்த மரத்தின் கிளையை முறித்துக் கொண்டு முன்னாலிருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின்போது, வீதியோரத்தில் இருந்த மரக்கிளை முறிந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மீது வீழ்ந்து முச்சக்கர வண்டிக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. ஆனால், முன்னால் இருந்த பயணிகள் ஒரு சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

திடீரென பஸ் சாரதிக்கு சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பஸ்ஸின் நடத்துனர் தெரிவித்தார்.

குறித்த சாரதிக்கு இதற்கு முன்னரும் இவ்வாறு சுகவீனம் ஏற்பட்டதாகவும், இதன்போது இவ்வாறானதொரு விபத்து இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment