கொஸ்வத்தை, கிரிமெட்டியான பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் போதைப் பொருள் பணியகத்தின் கண்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிரிமெட்டியான பிரதேசத்தில் 360 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய 2 கிலோ 232 கிராம் ஹெரோயினை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கிரிமெட்டியான பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 13 கிலோ 405 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார்.
இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிரிமெட்டியான, கொஸ்வத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு போதைப்பொருள் பணியகத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment