உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னியடி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மூதூர், கிளிவெட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவர் கடந்த சாதாரண தரப் பரீட்சையில் எட்டு ஏ மற்றும் ஒரு பி சித்தியையும் பெற்றுக் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நாளை (12) உயர்தரப் பரிட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தமைக்கான காரணங்களை பொலிஸார் தேடி வருவதோடு சடலத்தினை உறவிடர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளிலும் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நிருபர் கீத்

No comments:

Post a Comment