காரைதீவில் சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

காரைதீவில் சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது

நூருல் ஹுதா உமர்

நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்காக அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

அத்துடன் கெளரவ அதிதியாக பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், பிரதேச செயலக கணக்காளர் என்.ஜயசர்மிகா மற்றும் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு உதவி தொகைகளை வழங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் 11 சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment