விசேட அதிரடிப் படையினருக்கு கொரோனா - மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

விசேட அதிரடிப் படையினருக்கு கொரோனா - மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டன

களனி, களுபோவில, ராஜகிரிய பகுதிகளில் உள்ள மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேலியகொட மீன்சந்தைக்கு மீன் வாங்குவதற்காக சென்றவர்களே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரில் சிலர் முன்னர் விசேட பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment