(எம்.என்.எம்..அப்ராஸ்)
அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களிலுள்ள மக்களின் குறைபாடுளை தேவைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வது தொடர்பான ஊடக சந்திப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.அன்சார் தலைமையில் கல்முனை தனியார் வரவேற்பு மண்டபத்தில் (18) மாலை நடைபெற்றது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவின் கிழக்கு மாகாண இணைப்பாளர் என்.எப்.ஏ.மரைக்கார், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எஸ்.பீ.ஜப்பார், முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் கத்தமுத்து கணேஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சி மேலும் விஸ்தரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் இதன் போது கலந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தகர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment