தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியது - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியது

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று (15) வழமைக்குத் திரும்பியுள்ளதாக பல்கலைக்கழக, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (13) முதல் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் உட்பிரவேசிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

குறித்த மாணவர்களின் பீ.சீ.ஆர். பரிசோதனை அறிக்கையில் கொரோனாத் தொற்று இல்லையென கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர் – எம்.எஸ்.எம். ஹனீபா)

No comments:

Post a Comment

Post Bottom Ad