பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அறிவித்த நிலையில் அனைவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இன்று (15) முதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் PCR பரிசோனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad