பொலன்னறுவையில் நோயாளி ஒருவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

பொலன்னறுவையில் நோயாளி ஒருவருக்கு கொரோனா

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையின் 22 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நபரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். 

இந்நிலையில் விடுதியில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 50 பேர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர். 

அடையாளம் காணப்பட்ட 47 வயதான கொரோனா தொற்றாளர் பல நாட்களுக்கு முன்னர் பிறிதொரு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் பின்னர் அவர் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிக்காட்டியமையினால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின்போதே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad