ஊடகவியலாளருக்கு கொரோனா என சந்தேகம் - அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

ஊடகவியலாளருக்கு கொரோனா என சந்தேகம் - அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சந்தேகிப்பதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆயினும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

எனவே குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களையும் அரசாங்கத் தகவல் திணைக்கம் ஏற்கனவே சுகாதாரத் துறைக்கு வழங்கியுள்ளதுடள், தேவைப்பட்டால் விரைவில் குறித்த ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரத் துறை பொருத்தமான சுகாதார ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் குறித்த ஊடகவியலாளரின் PCR அறிக்கைகள் வரும் வரை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்குமாறு அந்தந்த ஊடக நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பைச் சேர்ந்த வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவருக்கு PCR சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad