வர்த்தகர்கள் அரிசியை பதுக்கினால் அரசாங்கம் மாற்று நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

வர்த்தகர்கள் அரிசியை பதுக்கினால் அரசாங்கம் மாற்று நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல எச்சரிக்கை

வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி அரிசிக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களானால் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில் அதற்கென அரசு 2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கிணங்க அரிசியை செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு உட்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் செயற்பட்டால் அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில்லை என்ற கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்படுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment