ரிசாத்தின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை, அரசாங்கத்திலுள்ளவர்கள் ஓடிஒழியாமல் குற்றமற்றவர்கள் என நிரூபித்தார்கள் - அமைச்சர் மகிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

ரிசாத்தின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை, அரசாங்கத்திலுள்ளவர்கள் ஓடிஒழியாமல் குற்றமற்றவர்கள் என நிரூபித்தார்கள் - அமைச்சர் மகிந்தானந்த

20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவையில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அரசாங்கம் அவரின் ஆதரவை பெற முயற்சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ரிசாத் பதியுதீனின் ஆதரவு இல்லாமலே 20வது திருத்தத்தினை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு பதிலாக நீதிமன்றத்தில் சரணடைந்து தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க வேண்டும் என மகிந்தானந்த அளுத்கமகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை முன்னைய அரசாங்கம் இலக்கு வைத்தபோது அவர்கள் ஓடிஒழியாமல் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ரிசாத் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சராக பணி புரிந்தவேளை செய்த பல குற்றங்களுக்காக ரிசாத் பதியுதீனிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad