இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர் ஒருவர் நியமிக்கப்பட்டார் - மைத்திரிபால பரபரப்பு குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர் ஒருவர் நியமிக்கப்பட்டார் - மைத்திரிபால பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினைகள் எழுந்தன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரை அழைத்து நான் விளக்கம் கோரினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெறுகின்றன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படையினரும் பொலிஸாரும் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாடு செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்தது, இது குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்யும் முன்னரே மனித உரிமைகள் ஆணைக்குழு இது குறித்து ஜெனீவாவிற்கு தெரிவித்திருந்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு செய்த முறைப்பாடுகள் காரணமாக இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைவதற்கான வாய்ப்புகளை இழந்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நான் ஆணைக்குழுவின் தலைவரை அழைத்து என்ன செய்கின்றீர்கள் என கேட்டேன், உயிரிழந்த விடுதலைப் புலிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயர் பதவியில் அமர்த்தப்பட்டமை பின்னரே எனக்கு தெரியவந்தது. அவரே இலங்கைக்கு எதிராக அறிக்கைகளை ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளார் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment