நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வந்தந்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போதுவரை 74 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment