COVID - 19 தொற்று நிலைமை காரணமாக அனைத்து இந்து, பௌத்த, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க அறநெறி பாடசாலைகளுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது அறநெறி பாடசாலைகளையும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கேற்ப மீள ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment