வவுனியாவில் கடும் காற்று - பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

வவுனியாவில் கடும் காற்று - பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம்

வவுனியா செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

செட்டிகுளத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து, பேருந்து நிலையத்தில் தரித்து நின்றது.

இதன்போது எதிர்பாராமல் ஏற்பட்ட காற்றின் வேகத்தினால் அருகிலிருந்த பாரிய பாலை மரம் ஒன்று திடீரென்று பேருந்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.

எனினும் பேருந்தில் இருந்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad