கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பலி

கலேவல - ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் வயலுக்கு நீர் இறைப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மூன்று பிள்ளைகளும் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் 7 வயதான சிறுவனும் இவ்வாறு உயிரிழந் துள்ளனர்.

அத்துடன் பிரேதப் பரிசோதனைக்காக இவர்களின் உடல் கலேவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment