அம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

அம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு

கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை - சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை முற்றுகை இட்டனர்.

இதன்போது குறித்த கிணற்றில் இருந்து குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் அவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.எல்.எம் நாஸிம்

No comments:

Post a Comment