மாகந்துரே மதுஷின் கொலையுடன் அரசியல்வாதிகள், போதைப் பொருள் கடத்தல் காரர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

மாகந்துரே மதுஷின் கொலையுடன் அரசியல்வாதிகள், போதைப் பொருள் கடத்தல் காரர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது

மாகந்துரே மதுஷுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் காரர்களின் பெயர்கள் அவரின் கொலை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் முன்வைத்தனர்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காகவே பிரபல பாதாள உலக குற்றவாளி மகந்துரே மதுஷ் கொல்லப்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.

மதுஷின் வழக்குகள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டால் அவர் பல அரசியல்வாதிகள் குறித்த இரகசியங்களை அம்பலப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் காணப்பட்டன. அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே அவர் கொல்லப்பட்டார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொலை இடம்பெறுவது இது முதல் தடவையில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றுள்ளன. மதுஷ் கொல்லப்பட்ட விதமே பிரச்சினைக்குரியது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரில் மதுஷ் பல அரசியல்வாதிகளுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளது எனத் தெரிவித்திருந்தார் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 80 அரசியல்வாதிகளுக்கு போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளது என்பதை மதுஷ் தெரிவித்திருந்தார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்ததையும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment