கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணியைத் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுவரும் நிலையிலேயே கட்டுநாயக்க பகுதியிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சாலைகளில் அலுவல்களை முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதற்காக சமுகமளிக்க வேண்டிய ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளார்.

மேலம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களிடையே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad