ரிஷாட் பதியுதீன் மற்றும் மொஹமட் யாசீன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

ரிஷாட் பதியுதீன் மற்றும் மொஹமட் யாசீன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீன் ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், ரிஷாட் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment