ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment