ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி பயிலும் 2020 - 2021 கல்வி ஆண்டுக்கான புதிய ஆசிரிய மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கலாசாலையின் அதிபர் எம்.சி. ஜுனைட் தெரிவித்தார்.
இக்கலாசாலையில் பயிலும் அனைத்து ஆசிரிய மாணவர்களும் ஒக்டோபர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலைக்கு வருகை தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஆசிரிய மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அவர்களது சுய அஞ்சல் முகவரிகளுக்கு ஏற்கெனவே தபாலிடப்பட்டுள்ளாகவும் அவர் கூறினார்.
எனவே, அந்த அழைப்பின் பிரகாரம் அனைத்து ஆசிரிய மாணவர்களும் வருகை தந்து தங்களது வரகைப் பதிவை உறுதி செய்து தங்களை இணைத்துக் கொண்டு கல்வி நடவடிக்கைகளைத் துவங்க வேண்டும் என நிருவாகத்தால் கேட்டுக் கொள்ளப்டுகின்றார்கள்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பக் கல்வித் துறையில் 155 ஆசிரிய மாணவர்களும் ஆங்கிலத்துறை 7 தமிழ்த் துறை 16 சமூக விஞ்ஞானம் 18 றோமன் கத்தோலிக்கம் 17 விஞ்ஞானம் 13 பேர் என மொத்தமாக 226 ஆசிரிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆசிரிய மாணவர்கள் அனைவரும் கலாசாலைக்கு வரும்போது கோரப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தங்கள் வசம் எடுத்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலதிக விசரங்களைப் பெற 065 2223368 என்ற கலாசாலை தொடர்பு இலக்கத்துடனோ அல்லது கலாசாலை அதிபரின் 0773632586 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டக் கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 01.09.1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment