பாடசாலைகளில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

பாடசாலைகளில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை

பாடசாலைகளில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் அறிக்கையொன்றை கோருவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான ஆவணங்கள், அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆவணங்கள் பாடசாலை அதிபர்களால் பூரணப்படுத்தப்பட்டு அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் நிலவும் பௌதீக குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுள் முன்பள்ளிகளில் நிலவும் பௌதீக வளங்களுக்கான குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இதற்கான ஆவணங்களும் எதிர்வரும் ஓரிரு நாட்களில் முன்பள்ளிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment