ஜோர்தானில் பணி புரியும் 350 இற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்களுக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

ஜோர்தானில் பணி புரியும் 350 இற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்களுக்கு கொரோனா

வௌிநாடுகளில் தொழில் புரிந்த 64 இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்த இலங்கை தொழிலாளர் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள், முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2,600 இற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தொழிலாளர்கள் தொடர்பில் அந்தந்த தூதரகத்தினூடாக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரையில் இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment