ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை போட்டால் குரங்குகள் ஆகிவிடுவார்கள் - ரஷியாவில் எதிர்மறை பிரச்சாரம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை போட்டால் குரங்குகள் ஆகிவிடுவார்கள் - ரஷியாவில் எதிர்மறை பிரச்சாரம்

ஒக்ஸ்போர்ட் தயாரிக்கும் கொரோனா ஊசியை போட்டுக் கொள்பவர்கள் குரங்குகளாகிவிடும் அபாயம் இருப்பதாக ரஷியாவில் பரவி வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரிட்டனில் தயாராகும் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியை, கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக் கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படம், ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் உள்ளிட்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment