பண்டாரவளையில் ஐந்து சிறுவர்கள் தப்பியோட்டம் - காப்பக உதவிப் பொறுப்பாளர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

பண்டாரவளையில் ஐந்து சிறுவர்கள் தப்பியோட்டம் - காப்பக உதவிப் பொறுப்பாளர் கைது

பண்டாரவளை சிறுவர் காப்பகத்தின் ஐந்து சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அதற்கு உதவிய காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்டாரவளை சிறுவர் காப்பகத்திலேயே இன்று 16-10-2020 காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்ட சிறுவர்களில் ஐவரே தப்பிச் சென்றுள்ளனர். 

இது குறித்த தகவல் கிடைத்ததும் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து சிறுவர்களை மீட்டதுடன் குறித்த சிறுவர்கள் தப்பிச் செல்ல உதவிய காப்பக உதவிப் பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட காப்பக உதவிப் பொறுப்பாளர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகள் நிறைவுற்றதும் காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad