உலகளாவிய பட்டினி நாடுகள் பட்டியலில் இலங்கை 64 ஆவது இடம் - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

உலகளாவிய பட்டினி நாடுகள் பட்டியலில் இலங்கை 64 ஆவது இடம்


உலக அளவில் 107 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை நாடுகளின் பட்டியலில் இலங்கை 64 ஆவது இடத்தில் இடம் பிடித்துள்ளது.

உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பட்டினியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பலதரப்பு நிறுவனங்களின் தரவுக் கணக்கீடுக்கு அமைய இந்தக் குறியீடு கணிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், 2020 ஆண்டு உலகளாவிய பட்டினிக் குறியீட்டு அறிக்கையின்படி இலங்கை அனைத்து தெற்காசிய அண்டை நாடுகளையும் விட சிறப்பாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில், நேபாளம் 73ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 75 ஆவது இடத்திலும், மியன்மார் 78 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 88ஆவது இடத்திலும், இந்தியா 94 ஆவது இடத்திலும் மற்றும் ஆப்கானிஸ்தான் 99ஆவது இடத்திலும் உள்ளன.

2020 GHI மதிப்பெண்களின்படி, சாட், திமோர் மற்றும் மடகஸ்கார் ஆகிய மூன்று நாடுகளில் ஆபத்தான அளவு பட்டினி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 690 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad