நாளை ஞாயிற்றுக்கிழமை (11) நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கும் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் இப்பரீட்சையானது கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிற்போடப்பட்டும் கொரோனா நோய் காலப் பகுதியிலேயே நடாத்தப்படுவதன் காரணமாக மாணவர்கள் பல வகையான இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படலாம்.
இதனை அனைத்து பெற்றோர்களும் விளங்கி இப்பரீட்சைக்கு தமது பிள்ளைகளை சிறப்பாக வழிநடாத்த வேண்டுமெனவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் அனைவரும் எந்தவிதமான தடைகளும் இன்றி சிறப்பாக பரீட்சைக்கு தோற்ற இறைவனை பிரார்த்திப்பதாகவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment