ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா வழங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா வழங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000 கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் அதனை வழங்கும் பொருட்டு ரூ. 400 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள குறித்த பகுதிகளில் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஓரிரு நாட்கள் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment