வெள்ளை மாளிகையின் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி டொனால்ட் ட்ரம்ப் மூச்சு விட சிரமப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா என இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் தற்போது (ஒக்டோபர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை டொனால்ட் டிரம்புக்கு மூச்சு திணறல் போன்ற பிரச்சினை இல்லை. அவருக்கு ஒக்சிஜன் உதவி தேவைப்படவில்லை. ஆனால், மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலையில் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கட்டம் எனவும், அவரது உடல் நிலை முழுவதுவமாக குணமடையும் என்பதை தற்போது கூற இயலாது என்று டொக்டர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment