கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 39 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 39 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 5.30 மணியுடான காலப்பகுதியில கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 39 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அது தவிர சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியே மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்ட தொழிற்சாலைகளிலிருந்து கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இது இவ்வாறிருக்க கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதில் 78 நோயாளிகள் மாவட்டத்தில் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டவர்கள் ஏனைய 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கண்டறியப்பட்டவர்கள் ஆவர். 

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 18,133 பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 7,020 முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

நேற்றிரவு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலையின் 36 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் கட்டுநாயக்க, சீதுவ பொது சுகாதார வைத்திய அலுவர் பிரிவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad