கொவிட்-19 தொற்றுக் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், அமெரிக்காவிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் இன்று (01) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் 312 பேர் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதோடு, ஏனையோர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்துள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment