தாய்லாந்தில் ரயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலி - 29 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

தாய்லாந்தில் ரயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலி - 29 பேர் காயம்

தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிழக்கே 50 கி.மீ. தொலைவில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. புத்த திருவிழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பேருந்து, இன்று காலை 8 மணியளவில் கிலாங் கவீங் கிலன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கடவையில் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த 17 பேர் பலியாகினர். 29 பேர் காயமடைந்தனர். இதனை மாகாண ஆளுநர் மைத்ரீ திரிதிலானந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்தது. அதன் மேற்கூரை தூக்கி எறியப்பட்டது. பலரது உடல்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்தன. அவர்களது உடைமைகளும் ஆங்காங்கே கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். கிரேன் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற கொடூர விபத்துகள் நடப்பது வழக்கமாக காணப்படுகின்றன. மோசமான வீதிகள், விரைவு பயணம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் வலுவற்ற சட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தும் அந்நாட்டில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைந்துள்ளன.

No comments:

Post a Comment