கேரள கஞ்சாவை தன்னகத்தே வைத்திருந்த நபரொருவர் ஆழியவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை பகுதியில் கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தகவலுக்கமைய பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றைய தினம் (10) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 10.765 கிலோ கிராம் கேரள கஞ்சாவும், 14.500 ரூபா பணத்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிசார் தெரிக்கின்றனர்.
கிளிநொச்சி நிருபர் நிபோஜன்
No comments:
Post a Comment