ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 5, 2020

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று (05) இடம்பெறவுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment