இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 15ஆவது நோயாளி மரணமாகியுள்ளார்.
குளியாபிட்டி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்பை பெற்று வந்த, 56 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
குளியாபிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் இன்று (24) அதிகாலை மரணமடைந்துள்ளார்.
இருதய நோய், சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ள குறித்த நோயாளி, அந்நோய்களின் உக்கிரம் காரணமாக மரணமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக கடந்த நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 22ஆம் திகதி) இலங்கையில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
No comments:
Post a Comment