புகையிரத கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, October 23, 2020

புகையிரத கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பிரதான புகையிரத பாதையின் யட்டகொட முதல் கொழும்பு கோட்டை வரையான பகுதிகளிலும், புத்தளம் முதல் கொழும்பு வரையான பகுதிகளிலும், கடலோர புகையிரத பாதையில் பென்தொட முதல் கொழும்பு வரையான பகுதிகளில் பயணிக்கு புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை மற்றும் தெமடகொட புகையிரத நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

இருப்பினும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட புகையிரத சேவைகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காகவும், பரீட்சை அதிகாரிகளுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகையிரதம் மற்றும் விசேட புகையிரதங்களை தவிர்த்து ஏனைய புகையிரதங்கள் எந்த வொரு நிலையங்களிலும் நிறுத்தப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment