தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி

ஹட்டன், பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி, தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது. இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று (11) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு தங்கியிருந்த கல்வி பயின்ற மாணவர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இராணுவம் 10 பஸ்களை ஈடுபடுத்தியது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலையடுத்து நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே முன் பாதுகாப்பு ஏற்பாடாக ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment