முழு கம்பஹா மாவட்டத்திற்கும் இன்று இரவு 10.00 மணி முதல் திங்கள் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 21, 2020

முழு கம்பஹா மாவட்டத்திற்கும் இன்று இரவு 10.00 மணி முதல் திங்கள் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு

முழு கம்பஹா மாவட்டத்திற்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) அதிகாலை 5.00 மணி வரை தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரிவுகளில், கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, இந்நிலையில் நேற்றையதினம் (20) குளியாபிட்டி பகுதியிலுள்ள 5 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad