MT New Diamond கப்பலிடமிருந்து சட்டமா அதிபர் ரூபா 340 மில்லியன் நஷ்டஈடு கோரிக்கை - கெப்டனுக்கு நீதிமன்றில் விளக்கமளிக்க அழைப்பாணை பெற CID இற்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

MT New Diamond கப்பலிடமிருந்து சட்டமா அதிபர் ரூபா 340 மில்லியன் நஷ்டஈடு கோரிக்கை - கெப்டனுக்கு நீதிமன்றில் விளக்கமளிக்க அழைப்பாணை பெற CID இற்கு உத்தரவு

MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூபா 340 மில்லியனை (ரூ. 34 கோடி) நஷ்டஈடாக செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரோவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (15) வரையான காலப்பகுதி வரை கடற்படை, வான்படை உள்ளிட்ட அனைத்து பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு, மீட்பு, பராமரிப்பு செலவாக இதனை வழங்குமாறு, சட்டமா அதிபர், குறித்த கப்பல் உரிமை நிறுவன சட்டத்தரணிகளுக்கு இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த அனர்த்தம் தொடர்பில், கடல் சுற்றாடல் சட்டத்தின் கீழ், நீதிமன்றில் விளக்கமளிப்பதற்காக, MT New Diamond கப்பலின் கெப்டனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான, அழைப்பாணையை பெறுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, சட்டமா அதிபரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment